19,Jun 2026 (Fri)
  
CH

அதிகளவான உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டை பெற்ற தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி தற்போது 200 உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது, இதில் தனமல்வில பிரதேச சபை மற்றும் பலாங்கொடை நகர சபை உட்பட நேரடியாகக் கைப்பற்றப்பட்ட 151 நிறுவனங்கள் அடங்கும்.


ஐக்கிய மக்கள் சக்தி கம்பளை நகர சபை மற்றும் பெந்தோட்டை பிரதேச சபையை இன்று கைப்பற்றியதுடன், அவர்களது மொத்த உள்ளூராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 17 உள்ளூராட்சி நிறுவனங்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலா 3 உள்ளூராட்சி நிறுவனங்களையும் பெற்றுள்ளன.


ஐக்கிய தேசியக் கட்சியால் எந்தவொரு நிறுவனத்தின் அதிகாரத்தையும் பெற முடியவில்லை. சுயேச்சைக் குழுக்கள் உட்பட சில கட்சிகள் 12 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.




அதிகளவான உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டை பெற்ற தேசிய மக்கள் சக்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு