தெஹிவளை தேசிய விலங்கினச்சாலை, தங்கள் பெயரில் இயங்கும் போலி சமூக ஊடகக் கணக்கு குறித்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) அதிகாரபூர்வமாக முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த முறைப்பாட்டின்படி, பயனர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் நோக்கில் தேசிய விலங்கினச்சாலையின் பெயரைப் பயன்படுத்தி போலியான பேஸ்புக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது.
அந்த போலி கணக்கில், ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஒரு சீட்டிழுப்பை நடத்துவதாகவும், வெற்றியாளர்களுக்கு பல்வேறு பரிசுகளை வழங்குவதாகவும் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் கணக்குக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தேசிய விலங்கினச்சாலை நிர்வாகம் தங்கள் முறைப்பாட்டில் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இது போன்ற போலிக் கணக்குகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.













0 Comments
No Comments Here ..