தேசிய போக்குவரத்து ஆணையம், பேருந்து கட்டணங்களை 2.5% குறைக்க முடிவு செய்துள்ள நிலையில், திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று (ஜூன் 26, 2025) அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கட்டணக் குறைப்பு ஜூலை 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், பேருந்து உரிமையாளர் சங்கங்கள் இந்தக் கட்டணத் திருத்தத்திற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இவர்களின் எதிர்ப்பு, கட்டணக் குறைப்பு அமலாக்கத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 Comments
No Comments Here ..