23,Dec 2025 (Tue)
  
CH

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் இலங்கைக்கான வலியுறுத்தல்கள்: பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிறுத்துக..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தனது இலங்கை விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னர், இன்று (ஜூன் 26, 2025) கொழும்பில் நடந்த ஊடகச் சந்திப்பில் பல முக்கியமான விடயங்களை வலியுறுத்தினார்.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act) ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் குறித்து விரைவாக மதிப்பாய்வு செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் டர்க் வலியுறுத்தினார்.


தன்பாலின உறவுகளைக் குற்றமற்றதாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் உள்ளதென்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அது விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் காவல்துறையில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர் முக்கியமாகச் சுட்டிக்காட்டினார்.


மனித உரிமைகள் தொடர்பான கவலைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியான ஈடுபாட்டை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் குறிப்பிட்டார்.




ஐ.நா. உயர்ஸ்தானிகரின் இலங்கைக்கான வலியுறுத்தல்கள்: பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிறுத்துக..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு