சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் என சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
தொற்றுநோய் ஆய்வுப்பிரிவின் பதில் விசேட வைத்திய நிபுணர் அருணி ஹதமுண தெரிவித்தபடி, சிக்குன்குன்யா ஒரு வைரஸ் காய்ச்சல் ஆகும். இது கொசுக்களால் பரவுகிறது. சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி சில வாரங்களுக்கு நீடிக்கும். இந்த மூட்டு வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெற மருத்துவ சிகிச்சை அவசியமென சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சிக்குன்குன்யா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் அருணி ஹதமுண குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருப்பதுடன், நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்.
0 Comments
No Comments Here ..