இலங்கை போக்குவரத்து சபை உட்பட அனைத்துப் பயணிகள் பேருந்துகளின் சாரதிகளும் எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டிகள் அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்துள்ளார்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். வீதிப் பாதுகாப்பில் சர்வதேச தரத்தைப் பேணுவதற்கான முயற்சியில் இது ஒரு முக்கிய படி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய விதிமுறை, இலங்கையின் பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..