வவுனியா மாநகர சபையினால் இலுப்பையடி வீதியில் அமைந்திருந்த வீதியோர வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கை இன்று (ஜூலை 14) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, வீதியோர வியாபாரிகளுக்கும் மாநகர சபை ஊழியர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
ஏற்கனவே, மாற்று இடத்திற்குச் சென்று வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகர சபையினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கமைய அகற்றப்படாத கடைகளை அகற்றும் நடவடிக்கையில் மாநகர சபை ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதியோர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், வர்த்தகர்களுக்கும் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வீதியோரக் கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன.
0 Comments
No Comments Here ..