யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின்போது மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகளும் சில எலும்புச் சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் நேற்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு மொத்தம் 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 15 நாட்கள் தொடர்ச்சியாகப் பணிகள் நடைபெற்று, பின்னர் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பணிகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகள், செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..