2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் தற்கொலை குண்டுத் தாக்குதல் வழக்கின் மேலதிக விசாரணை 2025 ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (ஜூலை 16) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முக்கிய சாட்சியாளர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாததால், முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, சாட்சி விசாரணையை ஒத்திவைக்கக் கோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில், அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகள் உட்பட 27 குற்றச்சாட்டுகளின் கீழ், மூன்று பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் மேலதிக சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் விசாரிக்கப்பட உள்ளன.
0 Comments
No Comments Here ..