முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தின் வாடகைக்காக, பெருந்தொகை பணத்தை அமைச்சிலிருந்து பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் மாதாந்தம் 240,000 ரூபாய்களை அமைச்சிலிருந்து பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளபடி, இந்த வாடகை பணம் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நண்பர்களில் ஒருவரின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சுகாதார அமைச்சின் பதிவுகளின்படி, அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பென்ஸ் ரக கார் ஒருபோதும் சுகாதார அமைச்சு வளாகத்திற்கு வரவில்லை என்பதும் விசாரணையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..