20,Jun 2026 (Sat)
  
CH

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: விடுவிக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களையும், அவர்களது படகுகளையும் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதிசெய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.


இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அவர் எழுதிய கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன், மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.


இராமேஸ்வரத்தை சேர்ந்த 8 கடற்றொழிலாளர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இந்தநிலையிலேயே, கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதிசெய்யுமாறு தமிழக முதலமைச்சர், கடிதம் எழுதியுள்ளார்.




இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: விடுவிக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு