மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிகள் கைவிடப்பட்டதைப் போன்று, செம்மணி மனிதப்புதைகுழி விடயங்களை ஒருபோதும் மூடி மறைக்க அனுமதிக்கப் போவதில்லை என இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப்புதைகுழிகள் மிக முக்கிய பங்கை வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமாயின், குறித்த மனிதப்புதைகுழிகளை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
செம்மணி மனிதப்புதைகுழியும், வடக்கு-கிழக்கில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஏனைய மனிதப்புதைகுழிகளும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையுடன் சரியான முறையில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.













0 Comments
No Comments Here ..