20,Jun 2026 (Sat)
  
CH

டிரம்ப்-மஸ்க் மோதல்: 'தென்னாப்பிரிக்காவுக்கே திரும்பிச் செல்ல நேரிடும்' - டிரம்பின் எச்சரிக்கை

டிரம்பின் வரி மற்றும் செலவு மசோதாவுக்கு எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், தேவைப்பட்டால் புதிய கட்சியைத் தொடங்குவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் மீது விமர்சனங்களை முன்வைத்து, அவர் மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கே செல்ல வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.


டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், "அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் என்னை தீவிரமாக ஆதரித்தார். ஆனால் EV வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்பதை நான் நீண்ட நாட்களாக கூறி வருகிறேன். இது எலான் மஸ்க்கிற்கும் தெரியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், மஸ்க்கை நேரடியாகத் தாக்கி, "வரலாற்றில் எந்த மனிதரையும் விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான். சலுகைகள் மட்டும் இல்லையென்றால் கடையை காலி செய்துவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கே அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்," என்றும் டிரம்ப் கடுமையாகப் பதிவிட்டுள்ளார்.





டிரம்ப்-மஸ்க் மோதல்: 'தென்னாப்பிரிக்காவுக்கே திரும்பிச் செல்ல நேரிடும்' - டிரம்பின் எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு