தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கும் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார். கனடாவில் இயங்கும் தமிழ் அமைப்பு எழுதிய கடிதத்தில் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
குறித்த கடிதத்தில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி தமிழ் இனப்படுகொலையினால் தமிழ் கனேடியர்கள் சுமக்கும் வலியைப் புரிந்து கொள்வதாக, கனடா அனைத்து சமூகங்களையும், குறிப்பாக தமிழர்களையும் ஆதரிப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அளித்து வரும் பங்களிப்புகளை கனேடிய அரசாங்கம் மதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவையில் பதவி வகித்த இரண்டாவது இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சராக அவரது பாரம்பரியம் குறித்துப் பெருமைப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை நோக்கிய உண்மை மற்றும் நீதிக்கான அழுத்தத்திற்கு சுயாதீனமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கும் என மார்க் கார்னி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் வாழும் ஈழத்தமிழர்கள் வணிக மற்றும் சமூகத் தலைவர்களாக இருந்து, கனடாவின் சமூகத்திற்கு செய்யும் மகத்தான பங்களிப்புகளை கார்னி சுட்டிக்காட்டியுள்ளார்.













0 Comments
No Comments Here ..