15,Jun 2026 (Mon)
  
CH

இலங்கை வரும் ஷாருக்கான் -கொழும்பில் பிரமாண்டமான நிகழ்ச்சி

கொழும்பில் அமையவுள்ள City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விசேட விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக City of Dreams SriLanka அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியோரின் தனித்துவமான திட்டமான இது, தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாக அமையவுள்ளது. இது தனியார் துறையால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது.


இந்த திட்டம் சர்வதேச தரத்திலான கேசினோ ஹால், சூப்பர் சொகுசு Nüwa ஹோட்டல் வளாகம் மற்றும் ஷாப்பிங் மால் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பர ஹோட்டல் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமைவிடம்: இலங்கையின் பொருளாதார மையமான கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஆடம்பர சுற்றுலா ஹோட்டல் வளாகம், சிறந்த ஹோட்டல்கள், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு, ஷாப்பிங் மற்றும் MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions) அனுபவங்களை ஒரே இடத்தில் வழங்கும்.




இலங்கை வரும் ஷாருக்கான் -கொழும்பில் பிரமாண்டமான நிகழ்ச்சி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு