யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து நேற்றையனால் அகழ்வின் போது 4 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதற்கமைய, இதுவரை 37 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் குறித்த புதைகுழியில் இருந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் 30 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் பின்னிப்பிணைந்த நிலையில் காணப்படுகின்றது.
இதற்கிடையில், சித்துப்பாத்தி மனித புதைகுழியை அண்மித்த பகுதியில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் நேற்றைய தினம் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் ராஜ் சோமதேவவின் மேற்பார்வையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை மாணவர்கள் இந்த அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.













0 Comments
No Comments Here ..