யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (ஜூலை 3) எட்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் 34 முழுமையான மனித எலும்புக்கூடுகளும், மேலதிகமாக 6 எலும்புக்கூடு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. கண்டறியப்பட்டவற்றில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த அகழ்வுப் பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜா மேற்பார்வையில் நடைபெறுகின்றன. தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
அகழ்ந்தெடுக்கப்பட்ட 34 முழுமையான எலும்புக்கூடுகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மற்றும் மானிடவியல் பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..