04,Jul 2025 (Fri)
  
CH

இலங்கையில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்: 67,000 பன்றிகள் பாதிப்பு - இடமாற்றத் தடை

இலங்கையில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக சுமார் 67,000 பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பன்றி இறைச்சி உள்ளிட்டவற்றை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு, மேல், ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்படப் பல மாகாணங்களில் இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க, பண்ணையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல கோரிக்கை விடுத்துள்ளார்.




இலங்கையில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்: 67,000 பன்றிகள் பாதிப்பு - இடமாற்றத் தடை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு