போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரின் பிணை மனுக்களை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஸ்ரீகாந்த் தரப்பில், போதைப்பொருள் பயன்படுத்துவதற்கும், வைத்திருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என வாதிடப்பட்டது. கிருஷ்ணா தரப்பில், மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இருவருக்கும் பிணை வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவரின் பிணை மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம், இவ்விரு நடிகர்களும் தொடர்ந்து சிறைக்காவலிலேயே இருப்பார்கள்.
0 Comments
No Comments Here ..