பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு செய்யும்போது செலுத்தும் பெறுமதி சேர் வரியை (VAT) மீண்டும் பெற்றுக்கொடுக்கும் புதிய முன்னரங்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் அமைச்சர், நிதி பிரதி அமைச்சர் அணில் ஜெயந்த ஆகியோர் நேற்று (ஜூலை 4) தொடங்கி வைத்தனர்.
இலங்கையில் 90 நாட்களுக்குக் குறைவாகத் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், 50,000 ரூபாய்க்கு அதிகமான VAT வரி செலுத்தியிருந்தால், இங்கு தாங்கள் செலுத்திய VAT வரியை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் உற்பத்திகளை கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கவும், இலங்கையின் வரி சேகரிப்பு முறையை ஒழுங்குபடுத்தவும் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..