இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. எனினும்,
இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சின் முன்னால் பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் சிரமப்பட்டனர். 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களை மட்டுமே பங்களாதேஷ் அணியால் பெற முடிந்தது.
பங்களாதேஷ் அணி சார்பாக, Parvez Hossain Emon 67 ஓட்டங்களையும், Towhid Hridoy 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். அத்துடன், இறுதி நேரத்தில் Tanzim Hasan Sakib ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு ஓரளவு வலுச்சேர்த்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், Asitha Fernando 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவருக்கு பக்கபலமாக, Wanindu Hasaranga 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பங்களாதேஷ் அணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.
இதனையடுத்து, இலங்கை அணிக்கு 249 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை இலங்கை அணி எட்டி, தொடரில் சமநிலைப்படுத்துமா அல்லது பங்களாதேஷ் அணி தனது பந்துவீச்சால் இலங்கையை வீழ்த்துமா என்பதை அறிய ஆட்டத்தின் எஞ்சிய பகுதி விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
0 Comments
No Comments Here ..