23,Dec 2025 (Tue)
  
CH

பாதாள உலகக் குழுத் தலைவன் "ஹரக் கட்டா" கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவனும், போதைப்பொருள் கடத்தல்காரருமான "ஹரக் கட்டா" என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன, சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிக்குன்குன்யா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


"ஹரக் கட்டா" பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவினரின் பலத்த பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


"ஹரக் கட்டா" பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருள் மோசடி, கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர் ஆவார்.


வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த இவர், சர்வதேச பொலிஸாரால் மடகாஸ்கரில் வைத்து கைது செய்யப்பட்டு, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். வழக்கு விசாரணைக்காக அவர் கடந்த ஜூலை 3 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.


இந்த நிலையில், "ஹரக் கட்டா" திடீர் சுகயீனம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலத்த பாதுகாப்பில் சிகிச்சை பெற்று

வருகிறார்.




பாதாள உலகக் குழுத் தலைவன் "ஹரக் கட்டா" கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு