கந்தானை: எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 "சுபோஷா" விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு திரிபோஷா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் திரிபோஷா பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (ஜூலை 04) கந்தானையில் உள்ள திரிபோஷா நிறுவனத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
திரிபோஷா நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் உற்பத்தியைத் தொடர எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் இச்சந்தர்ப்பத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த புதிய விற்பனை நிலையங்கள் மூலம் திரிபோஷா தயாரிப்புகள் பொதுமக்களுக்கு மேலும் இலகுவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..