இலங்கையில் மன்னார் மற்றும் பூநகரியில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மேற்கொள்ளவிருந்த 350 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கான ஆரம்பச் செலவுகளை இலங்கை அரசாங்கம் அந்நிறுவனத்திற்கு மீளச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
442 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தத் திட்டங்களிலிருந்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அண்மையில் விலகிக்கொண்டது. மின்சாரக் கொள்வனவு கட்டணத்தை புதிய அரசாங்கம் மாற்றியமைக்க முயன்றதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, கடந்த மே மாதம் அதானி நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், 3 மில்லியன் அமெரிக்க டாலர் உட்பட, இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையுடன் இணைந்து தங்கள் நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட பணிகளுக்கான ஆரம்பச் செலவுகளை மீளச் செலுத்துமாறு கோரியிருந்தனர்.
எவ்வாறாயினும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகையை இன்னும் இறுதி செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.













0 Comments
No Comments Here ..