16,Jul 2025 (Wed)
  
CH

யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேலும் 5 என்புத் தொகுதிகள் அடையாளம்!

மனிதப் பேரவலத்தின் சாட்சியமாக மாறிவரும் யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில், இன்று (திங்கட்கிழமை) மேலும் 5 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


இதன் மூலம், இதுவரை இந்த புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், 47 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


அதேநேரம், 4 என்புத் தொகுதிகள் பின்னிப்பிணைந்த நிலையில் காணப்படுவதாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேலும் 5 என்புத் தொகுதிகள் அடையாளம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு