முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கமறியல் நீடிப்பு, கொழும்பில் உள்ள ஒரு சொகுசு தொடர்மாடிக் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து ஒரு பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி–56 ரகத் துப்பாக்கி ஒன்றைப் பொலிஸார் கைப்பற்றியது தொடர்பானது. இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து மே 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர், சுகயீனம் காரணமாக மே 25 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மே 28 ஆம் திகதி மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..