ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி அப்துல் லத்தீப் முகமது ஜமீல், தாக்குதல்களுக்கு ஒரு நாள் முன்னதாக, ஏப்ரல் 20, 2019 அன்று தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வந்த சில நிமிடங்களிலேயே, ஹோட்டல் நிர்வாகம் அவரைப் பற்றி அரசு புலனாய்வு சேவைக்கு (SIS) மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்ததாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஜமீல் பாதுகாப்பு கண்காணிப்பு பட்டியலில் இருந்தபோதிலும், SIS அந்தத் தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்றார்.
250க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான ஜமீல், முதலில் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டு வீச நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது முயற்சி தோல்வியடைந்ததால், பின்னர் அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். தெஹிவளையில் உள்ள ட்ரொப்பிக்கல் தங்குமிடத்தில் நடந்த வெடிவிபத்தில் அவர் இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..