11,Jul 2025 (Fri)
  
CH

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் பாரிய நிலக்கீழ் பதுங்கு குழி தோண்டும் பணி ஆரம்பம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் பாரிய அளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள 8 ஆம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு ஏக்கர் பரப்பளவிலான காணியில் இந்தப் பணி நடைபெறுகிறது. இந்தக் காணி போரின் முன்னர் விடுதலைப் புலிகளின் முகாமாய்க் கருதப்பட்டது.


விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக இந்தக் காலகட்டத்தில் பாரிய நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று அமைக்கப்பட்டது. இந்தப் பதுங்கு குழி சுமார் 20 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது.


2009 ஆம் ஆண்டு போருக்குப் பின்னர், இந்தக் காணியில் கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்குடியிருப்புப் பொலிஸார் இந்தப் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.





முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் பாரிய நிலக்கீழ் பதுங்கு குழி தோண்டும் பணி ஆரம்பம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு