யாழ்ப்பாணம்,செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
எவ்வாறு இருப்பினும் சிறிது கால இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அந்த பணிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில், இரண்டாம் கட்டத்தின் கீழ் 15 ஆவது நாளான இன்றைய தினம், இறுதி நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தநிலையில், செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியில் மீண்டும் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் இன்று மாலை அறிவிக்கப்படும் எனப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணியான வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
சித்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரையில் 63 என்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 54 மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள மனித என்புக் கூட்டுத் தொகுதிகளில், சிறுவர்களின் என்புக் கூட்டுத் தொகுதிகளும் அடங்குகின்றன.
அத்துடன் சிறுவர்களின் ஆடைகள், பாடசாலை பை மற்றும் விளையாட்டு பொம்மை போன்றனவும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..