12,Jul 2025 (Sat)
  
CH

இலங்கைக்கு 36,000 சுற்றுலாப் பயணிகள் வருகை: சுற்றுலாத் துறையில் துரித வளர்ச்சி

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் (ஜூலை 1 முதல் 6 வரை) 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம், இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,204,046 ஆக உயர்ந்துள்ளது.


கடந்த 2024 ஆம் ஆண்டில், 12 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஓகஸ்ட் மாதத்திலேயே பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு முந்தைய ஆண்டை விட வேகமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது, இலங்கை சுற்றுலாத் துறையின் துரிதமான மீட்சியைப் பிரதிபலிக்கிறது.


ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 8,053 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,562 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,674 பேரும், சீனாவிலிருந்து 2,362 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.




இலங்கைக்கு 36,000 சுற்றுலாப் பயணிகள் வருகை: சுற்றுலாத் துறையில் துரித வளர்ச்சி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு