19,Mar 2026 (Thu)
  
CH

கிரிந்த மீன்பிடி துறைமுக மணல் அகழ்வு வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம்.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல வெள்ளிக்கிழமை (ஜூலை 11, 2025) உத்தரவிட்டார்.


இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) சமர்ப்பித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சந்தேக நபரை கைது செய்வதில் ஆணைக்குழுவுக்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்தது.


மீன்வளத் துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு சட்டப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட மணல் அகழ்வுத் திட்டத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 2.63 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விசாரணைகளின் போதுதான் ராஜித சேனாரத்னவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.




கிரிந்த மீன்பிடி துறைமுக மணல் அகழ்வு வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு