இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலை தளமாகக் கொண்ட தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் இது குறித்துச் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், ஈரான் இது தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
கடந்த மாதம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி, அது தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக் காரணம் காட்டி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் தலையீட்டால், இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகேர், நீதித்துறைத் தலைவர் மோசெனி எஜெய் ஆகியோர் கலந்துகொண்ட ஈரான் தேசியப் பேரவைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் நடந்த கட்டிடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ஆறு ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில், ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான் உட்படச் சிலர் காயமடைந்தனர் என ஈரான் புரட்சிகரப்படையுடன் தொடர்புடைய அமைப்பு தற்போது செய்தி வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தன்னைக் கொலை செய்யச் சதி செய்வதாக மசூத் பெஜஸ்கியான் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..