லண்டனில் நடந்து வந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த போட்டி 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் நிறைவடைந்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "விம்பிள்டன் நாயகன்" என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. இதில் ஜானிக் சின்னர் கோப்பையுடன் பொதுமக்களுடன் புகைப்படம் எடுப்பது போன்ற ஒரு படம் இருந்தது. இந்த புகைப்படம், "ஜனநாயகன்" திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் போலவே இருந்ததால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
0 Comments
No Comments Here ..