மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் உள்ள ஒரு துரியன் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்த நபர் மீது தோட்டக் காவலாளி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர், மீரிகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய காவலாளி மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீரிகம பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..