மூன்றாம் ஆண்டைக் கடந்து நடைபெற்று வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் அவர் நடத்திய தொலைபேசி உரையாடல் தற்போது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் போரில் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், டிரம்ப் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். அடுத்த 50 நாட்களில் போரை நிறுத்தவில்லை என்றால், ரஷ்யா மீது 100 சதவீதம் பொருளாதாரத் தடைகளை விதிப்பேன் என அவர் எச்சரித்தார். இருப்பினும், இந்த எச்சரிக்கையை ரஷ்யா பொருட்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, டிரம்ப் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடியபோது, “மாஸ்கோவைத் தாக்க முடியுமா? செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கைத் தாக்க முடியுமா?” என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலளித்த ஜெலன்ஸ்கி, “நிச்சயமாக. நீங்கள் எங்களுக்கு ஆயுதம் வழங்கினால், நாங்கள் அதைச் செய்வோம்” என்று கூறியுள்ளாராம்.
முன்னதாக, உக்ரைன் தங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அதற்காக பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புவோம் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவை மோசமாக உணர வைத்து பேச்சுவார்த்தைக்கு வர வைப்பதே தனது யோசனை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய நகர்வுகள் ரஷ்யா - உக்ரைன் போரின் எதிர்காலம் குறித்துப் பல கேள்விகளை எழுப்பி
யுள்ளன.













0 Comments
No Comments Here ..