அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிபர் டொனால்டு டிரம்பின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துதல், ராணுவ ஆயுதக் கொள்முதல், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வரும் அதிபர் டொனால்டு டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள காந்தி சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப்பார்ப்பது மட்டுமல்லாமல் அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
டொனால்டு டிரம்பின் மனைவி மனிலா டிரம்பும் இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..