உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் பசுமை சொகுசு கப்பல்களை வாங்குவதில் அதிக முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் 645 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4,600 கோடி) மதிப்புடைய, முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் சொகுசு கப்பல் ஒன்றை வாங்க பில்கேட்ஸ் சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த சினோட் என்ற நிறுவனத்தால் இந்த சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 112 மீட்டர் நீளம் கொண்ட இந்த பிரமாண்டமான சொகுசு கப்பல் 5 தளங்களை கொண்டது.
இந்த கப்பல் உடற்பயிற்சி கூடம், ஒரு ஹைட்ரோ-மசாஜ் அறை, யோகா ஸ்டூடியோ, நீச்சல் குளம், ஹெலிபேட் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. கப்பல் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தாலும், 2024-ம் ஆண்டுக்கு முன்னர் இந்த கப்பல் கடலுக்கு செல்ல வாய்ப்பில்லை என சினோட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..