07,Feb 2026 (Sat)
  
CH

சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்.

கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.


இந்தத் திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், தேவையான சட்ட நடைமுறைகள் முடிவடைந்தவுடன் இது அமுலுக்கு வரும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.


இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்கள் அல்லது 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும். மேலும், நாட்டில் நீண்ட காலம் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு 8 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என அவர் கூறினார்.


இந்த புதிய திட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் பயணம் செய்வதை மேலும் இலகுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு