இலங்கையில் திரைப்படச் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத், பிரபல இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஆகியோரை இன்று (ஜூலை 19) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இலங்கையின் சுற்றுலாத் தலங்களையும், நாட்டின் வளமான கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் எதிர்காலத் திரைப்படத் தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள கண்கவர் இடங்களுக்கு மேலும் சுவாரஸ்யமான கதைகள் மற்றும் வெளிநாட்டு தயாரிப்புகளைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு, இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, சர்வதேச அளவில் இலங்கைக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.













0 Comments
No Comments Here ..