வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் நோக்கில், எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் இன்று (ஜூலை 19) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி தமது புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்தன.
இந்த நிகழ்வில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் வடக்கு கிழக்கின் தலைவியாக யோகராஜா கனகரஞ்சினியும், செயலாளராக சி. ஜெனிற்றாவும் தெரிவு செய்யப்பட்டனர்.
மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் விவரம்:
யாழ்ப்பாண மாவட்டம்: சி. இளங்கோதை
மட்டக்களப்பு மாவட்டம்: வ. அமலநாயகி
அம்பாறை மாவட்டம்: வ. செல்வராணி
திருகோணமலை மாவட்டம்: எஸ். செபஸ்ரியான்தேவி
வவுனியா மாவட்டம்: சி. ஜெனிற்ரா
முல்லைத்தீவு மாவட்டம்: ப. வீரமணி
கிளிநொச்சி மாவட்டம்: க. கோகிலவாணி
மன்னார் மாவட்டம்: கு. உதயசந்திரன்













0 Comments
No Comments Here ..