யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் நேற்று (ஜூலை 20) ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மற்றொன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை கட்டுப்படுத்த வந்த பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) நடந்த தனிநபர் தாக்குதல் சம்பவம் ஒன்று பொலிஸ் நிலையம் வரை சென்ற நிலையில், அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய தினம் இரு குழுக்களாகப் பிரிந்த தனிநபர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்து உடனடியாக விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ய நேரிட்டது. வன்முறையில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த மோதலுக்கான காரணம் மற்றும் சேதங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













0 Comments
No Comments Here ..