நாட்டில் 2025 ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 72 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்டதுடன் மற்றும் 41 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், 72 ஆவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று சீதுவையில் பதிவாகியுள்ளது.
அதற்கமைய, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கட்டுநாயக்க சீதுவை நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் தந்தை எனத் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர், 54 வயதுடைய ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத இருவரினால் நேற்றிரவு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..