கொழும்பு காலி முகத்திடலில் 2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயற்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த அப்போதைய சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை, குறித்த சம்பவத்தில் சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
சட்டமா அதிபரின் அந்தக் கடிதத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், சட்டமா அதிபரின் கடிதத்தை வலுவற்றதாக்கித் தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டைப் பரிசீலிப்பதற்கு அனுமதி வழங்கிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம், குறித்த இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம், சட்டமா அதிபரின் அசல் கடிதம் தொடர்பான சட்டப் போராட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.













0 Comments
No Comments Here ..