08,Feb 2026 (Sun)
  
CH

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, இரண்டாம் அமர்வின் இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றும் தொடர்ந்தன. இன்றைய அகழ்வில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.


இதன்படி, சித்துபாத்தி மனித புதைகுழியில் இருந்து இதுவரை மொத்தமாக 80 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் எவையும் இன்று அகழ்ந்தெடுக்கப்படவில்லை.


இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில், சிறுவர்களுடையது என நம்பப்படும் எலும்புக்கூடுகளும் உள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் கூறினார். மேலும், எந்தவிதமான தடயப் பொருட்களும் இன்று மீட்கப்படவில்லை என்றும், சில பொருட்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் அவை அகழ்ந்தெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த அகழ்வுப் பணிகள் நாளைய தினமும் தொடரும் என சட்டத்தரணி எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இதேவேளை, புதைகுழியில் இருந்து குழந்தைகளுக்கான பால் போத்தல் என சந்தேகிக்கப்படும் ஒரு போத்தலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.




செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு