13,Mar 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கணிப்பான்களை பரீட்சார்த்திகள் பயன்படுத்த அனுமதி

அரசினால் நடத்தப்படும் பரீட்சைகளிலும் தோற்றும் மாணவர்களுக்கு கல்குலேட்டர் எனப்படும் கணிப்பான்களை பயன்படுத்த கல்வி அமைச்சு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பரீட்சைகளுக்கே இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக கல்விச் சேவை இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சிலம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வென்னப்புவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

கணக்கியல் பரீட்சைகளில் இரண்டாம் பாகத்தை சுழற்சி முறையில் நடத்த எதிர்பார்க்கவில்லை எனவும் அது தொடர்பான நடைமுறையில் தற்போது மாற்றம் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகும் கணக்கியல் பரீட்சையில் கணிப்பான்களை பயன்படுத்த முடியுமா? என்பதை பரீட்சித்து பார்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் மாணவர்கள் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுவது இதுவே முதன்முறை எனவும் உலகத்திற்கு ஏற்றவகையில் கல்வி முறைமையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, க.பொ.த உயர்தர கணக்கியல் பரீட்சை, விஞ்ஞானவியல், தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அறிவியல் ஆகிய பாடங்களில் (Non Programmable calculators) எனப்படும் கணிப்பான்களை பயன்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.




கணிப்பான்களை பரீட்சார்த்திகள் பயன்படுத்த அனுமதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு