13,May 2024 (Mon)
  
CH
சினிமா

வருமானவரித் துறை அதிகாரிகள் முன் விஜய் ஆடிட்டர் ஆஜர்

கடந்த வாரம் விஜய், சினிமாபைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவணங்களின் அடிப்படையில் பைனான்சியர் அன்புசெழியன் 165 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


இந்த நிலையில் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் கிடைத்த 3 நாட்களுக்குள் வருமானவரித்துறை அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகி விளக்கம் வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதைத் தொடர்ந்து நேற்று விஜய் மற்றும் அன்புசெழியனின் ஆடிட்டர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்ததுடன். தங்கள் தரப்பு ஆவணங்களையும் சமர்பித்தனர். வருமானவரித்துறை ஆஜராக விதித்த கடைசி நாள் இன்று. அதனால் விஜய், கல்பாத்தி எஸ்.அகோரம், அன்புசெழியன் ஆகியோர் நேரில் ஆஜராவார்கள் என்று தெரிகிறது. விஜய் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு நீதிமன்றம் செல்லலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.





வருமானவரித் துறை அதிகாரிகள் முன் விஜய் ஆடிட்டர் ஆஜர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு