09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

4 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன மகளை நவீன தொழிநுட்பத்தின் மூலம் மீண்டும் சந்தித்த தாய்..!!

பெயரிடப்படாத ஒரு இரத்த நோயால் நான்கு வருடங்களுக்கு முன் இறந்த தனது மகளை, தென் கொரியாவை சேர்ந்த தாய் ஒருவர் VR (Virtual reality) தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் சந்தித்துள்ளார்.

You” எனப்படும் ஒரு தென்கொரிய ஆவணப்படக்குழு, 2016ம் ஆண்டு கண்டறியப்படாத ஒரு இரத்த நோயால் உயிரிழந்த 9 வயது சிறுமியை மீண்டும் அவருடைய தாய் சந்திக்கும் ஒரு உணர்வுபூர்வமான காட்சியை தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளது.அந்தப் படக்குழு கொரியாவைச் சேர்ந்த எம்.பி.சி என்ற நிறுவனத்துடன் சேர்ந்து சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி, 3 டி படத்தை மீண்டும் உருவாக்கியுள்ளனர்.நான்கு குழந்தைகளுக்கு தாயான ஜாங் ஜி-சங் ஒரு VR தொழில்நுட்பத்தின் மூலம், பச்சை திரைக்கு முன்னால் படமாக்கப்பட்ட தனது மகளின் முகத்தை மீண்டும் பார்த்து கண்ணீர் வடித்துள்ளார்.

தென் கொரியாவில் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் இந்த உணர்ச்சிபூர்வமான நிகழ்ச்சியைப் பார்த்துள்ளனர். முன்வா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்பப்பட்ட இந்த ஆவணப்படம், துக்கமடைந்த உறவினர்களை இழந்த குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.நெகிழ்ச்சியான இந்த சம்பவத்துக்கு பலர் மகிழ்ச்சி தெரிவித்து வந்தாலும், இந்த நிகழ்ச்சி சில கவலையை எழுப்புகிறது என்று சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நெறிமுறை மருத்துவர் பிளே பிளே விட்பி கூறியுள்ளார்.





4 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன மகளை நவீன தொழிநுட்பத்தின் மூலம் மீண்டும் சந்தித்த தாய்..!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு