08,May 2024 (Wed)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரஸால் இந்தியாவுக்கு அடித்தது அதிஷ்டம்! பெரும் அதிருப்தியில் சீனா..!

செரமிக், ஹோம்வேர், ஃபேஷன் சார்ந்த பொருட்கள், ஃபர்னிச்சர்கள், டெக்ஸ்டைல்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள் என பல பொருட்களை வாங்க, திடீரென இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறார்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்.

ஏன் இந்த திடீர் திருப்பம் என்றால், கொரோனா என்கிறார்கள். ஆக கொரோனா வைரஸால், சீனாவில் உயிர் இழப்பு மட்டும் ஏற்படவில்லை, வியாபார இழப்பும் ஏற்பட்டு இருக்கின்றது.சீனாவில் கொரோனா வைரஸ் சிக்கல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அங்கு அன்றாட வாழ்க்கையே பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. உணவகங்கள், மால்கள், ஹோட்டல்கள், உற்பத்தி ஆலைகள், அலுவலகங்கள் என பல இடமும் ஊழியர்கள் இல்லாமல் வெறிச் சோடி கிடக்கின்றன.

இந்த நிலையில், ஏற்றுமதிக்கு சீனாவில் பதவிவு செய்துவிட்டு அதிக நாட்கள் காத்திருப்பதற்கு பதிலாக, இந்தியா போன்ற வேறு நாடுகளிடம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என இறக்குமதி செய்யும் நாடுகள் முடிவெடுத்துள்ளன.எனவே தான் திடீரென இந்தியாவுக்கு அதிக ஏற்றுமதி விசாரணைகள் வந்து கொண்டு இருக்கிறதாம்.உலக அளவில் செராமிக் கண்காட்சி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.எப்போதும் செராமிக் வியாபாரத்தில் சர்வதேச அளவில் கலக்கும் சீனா இந்த முறை கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் கலந்து கொள்ளாததால், இந்த முறை இந்திய நிறுவனங்களுக்கு ஜாக் பாட் அடித்து இருக்கிறதாம்.

குறிப்பாக vitrified tiles ஏற்றுமதியில் இந்தியாவும் சீனாவும் அவ்வளவு போட்டி போடுமாம். இப்போது தனியாக இந்தியா கால் பதிக்க ஒரு நல்ல வாய்ப்பாம்.கொரோனாவைப் பார்த்து உலகமே அஞ்சி நடுங்கினாலும், கொரோனாவை பயன்படுத்தி ஏற்றுமதி வியாபாரத்தில் கல்லா கட்டத் தொடங்கி இருக்கிறது இந்தியா.தன் வியாபாரத்தை இந்தியா தட்டிக் கொண்டு போகிறது என சீனாவுக்கு கொஞ்சம் கடுப்பாகத்தான் செய்யும்.





கொரோனா வைரஸால் இந்தியாவுக்கு அடித்தது அதிஷ்டம்! பெரும் அதிருப்தியில் சீனா..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு