ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இடம்பெற உள்ள சர்வதேச மாநாடு ஒன்றில் பங்குபற்றுவதற்காக அவர் இந்தியா பயணிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
The Huddle எனப்படும் குறித்த சர்வதேச மாநாடு, இந்தியாவின் பெங்களூரில் இந்த மாதம் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளது.
இந்த நிகழ்வில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இததேவேளை மாநாட்டின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாட உள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிகழ்வின் தொடக்க உரையை நிகழ்த்தியிருந்ததுடன், இலங்கை - இந்திய உறவுகள் குறித்தும் விரிவாகப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..