ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலுக்காக ஒன்று கூடவுள்ளனர்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த கூட்டத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியில் காணப்படும் சில முறுகல் நிலை தொடர்பில் கலந்துரையாப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவதுவல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடவுள்ள புதிய கூட்டணி தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை இன்றைய தினத்திற்குள் தீர்க்கப்படும் என அரசியல் வாட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், புதிய கூட்டணி தொடர்பிலான சட்டபூர்வ அறிக்கை இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணியினை உருவாக்குவது தொடர்பில் நீண்டகாலமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையினை தீர்ப்பதற்கு அறிக்கை ஒன்றினை தயாரிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியினால் சட்ட வல்லுனர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அன்னம், யானை மற்றும் இதயம் ஆகிய மூன்றில் எந்த சின்னத்தில் களமிறங்குவது குறித்த தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டபூர்வ அறிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் என கட்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன.
0 Comments
No Comments Here ..